எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தின் நோக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை அவர்களின் தேவைகேற்ப இல்லங்களிலும், மறுவாழ்வு சேவைக்கென வடிவமைக்கப்பட்ட ஊர்திகளிலும், ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குவதாகும். அதன்படி, உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான கண்ணகி நகரில் இச்சேவைகளை முதலில் வழங்க அரசு மிக கவனமாக இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மையம் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 2023-24 - இல் கள அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின் போது, கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, இம்மையத்தில் சேவைகள் வழங்கப்படும். இம்மையமானது பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கையில் இம்மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இம்மையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பஸ்ஸரை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் முழுமையாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஐஓடி தொழில் நுட்பம் முதல்முறையாக இந்தியாவிலேயே இம்மையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவசர சூழ்நிலைகளை, தொலைவில் இருந்தாலும் உடனே கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முடியும்.
தரமான கட்டட வடிவமைப்பினை ஏற்படுத்தி மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட ஒரு புதிய பரிமாணத்தை அடைய இம்மையம் 3.08 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கு மறுவாழ்வு சேவை பெற வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
24 Nov 2024சென்னை : தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்
24 Nov 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
மகாராஷ்டிராவில் எதிர்பாராத ஒரு வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது : வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை
24 Nov 2024சென்னை : மராட்டியத்தில் பா.ஜ.க.வே எதிர்பாராத ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்று தெரிவித்த திருமாவளவன், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும்
-
கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது: நீட் தேர்வு குறித்து சபாநாயகர் அப்பாவு
24 Nov 2024சென்னை : தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்களின் வலைகள், படகு பறிமுதல்
24 Nov 2024ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் - படகு, வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சிகளிடம் மத்திய அரசு கோரிக்கை
24 Nov 2024புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பாமாகும் நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏ.: 9-வது வெற்றியை தவறவிட்ட மகாராஷ்டிரா காங். தலைவர்
24 Nov 2024மும்பை : 8 முறை தொடர் வெற்றி பெற்ற மராட்டிய காங். தலைவர் . 9-வது முறை சிவசேனா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
-
3.8 ரிக்டர் அளவில் அசாமில் லேசான நிலநடுக்கம்
24 Nov 2024திஸ்பூர் : அசாமில் ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
காலநிலை நிதி ஒப்பந்தத்திற்கு 300 பில்லியன் டாலர் குறைவு : இந்தியா நிராகரிப்பு
24 Nov 2024பாகு (அசர்பைஜான்) : 300 பில்லியன் டாலர் என்பது மிக குறைவு என்று காலநிலை நிதி ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
-
எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் இல்லை: மகராஷ்டிராவில் முதல்முறையாக 60 ஆண்டுகளில் இல்லாத நிலை
24 Nov 2024மும்பை : மகராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.