முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்ன வழக்கில் ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பு ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      தமிழகம்
Chennai-High-Court 2024-11-25

Source: provided

 

சென்னை: அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்போவதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்று கேள்வி எழுப்பினர். 

அப்போது, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட மனு மீது ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை டிச.,2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago
View all comments

வாசகர் கருத்து