முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இது என் பிறந்தநாள் வேண்டுகோள்: வரும் 2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      தமிழகம்
Udhayanidhi 2024-11-25

Source: provided

 

சென்னை: 2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர உறுதியேற்றுக்கொள்ளுங்கள் என்று தொண்டர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி தனது பிறந்தநாளை முன்னிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக துணை முதல்வரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனது பிறந்தநாளை வரும் 27-ம் தேதி கொண்டாட உள்ளார். இந்நிலையில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் கழகத்தினர் கவனம் செலுத்துவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., வருகிற நவம்பர் 27-ம் தேதி என் பிறந்தநாள் வருவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். அதிலும் குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு `கழகத்துக்கு நூறு இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தாருங்கள்' என்று கழகத்தலைவர், கழக இளைஞர் அணிக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றும்விதமாக, நடத்தப்பட்ட `என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறியும்போது, உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். 

திருமண விழாக்களைத் தங்கள் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் வாய்ப்பாகக் கருதி, அதையே கொள்கை விளக்க நிகழ்வாக மாற்றிக்காட்டியது, நமது திராவிட இயக்கம். என் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பும் கழகத்தோழர்களும் அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும் கழகப்பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே, என் விருப்பம். முன்பே சொன்னதுபோல், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச்செல்லும் நிகழ்வுகளை நடத்துவதில், கழகத்தோழர்கள் முனைப்புக் காட்டவேண்டும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஏழை அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளையும் கழகத்தோழர்கள் நடத்தவேண்டும்.  முக்கியமாக ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். என் பிறந்தநாளை முன்னிட்டு, பிளக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத்தோழர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக்கொண்டிருக்கும்போது நாம் 2026-சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். 2026-ல் வெற்றிபெற்று கழகத்தலைவரின் தலைமையிலான `திராவிட மாடல்' அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago
View all comments

வாசகர் கருத்து