முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் இல்லை: மகராஷ்டிராவில் முதல்முறையாக 60 ஆண்டுகளில் இல்லாத நிலை

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
congress-office

Source: provided

மும்பை : மகராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றியை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெற்றுள்ளது. இதில், தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பாஜக வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மகாயுதி கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றன.

எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி உத்தவ் தாக்கரே கட்சி 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் சரத் பவார் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி பார்த்தால்மகராஷ்டிராவில், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு கிடைக்கும். ஆனால், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எந்தக் கட்சியும் 28 இடங்களை வெல்லவில்லை. இதனால், மகராஷ்டிரா வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து