முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் நிறைவு டிசம்பர் வரை கண்காணிக்க நீர்வளத்துறை முடிவு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

 

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக சென்னையில் உள்ள முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளனடிசம்பர் வரை தொடர்ந்து பணிகளை கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 பெஞ்சல் புயல் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் அதனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூவம், அடையாறு, கொசஸ்தலை, பக்கிங்காம் கால்வாய் இதனுடன் இணைக்கப்பட்ட 31 கால்வாய்கள், நீர்வள ஆதாரமான 13 கால்வாய்கள், இதனுடன் இணைந்துள்ள 3519 கி.மீ, வடிகாலகள் வழியாக, மழைநீர் வெளியேறுகிறது.

குறிப்பாக கடந்தாண்டு அதீத மழை மற்றும் கடல் சீற்றம், உயர் அலைகள், காற்றின் காரணமாக வெள்ள நீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் முகத்துவாரங்கள் வழியாக கடலில் வடிவதில் சிரமம் ஏற்பட்டது. 

இதனை கருத்தில் கொண்டு இந்தாண்டு சென்னை வடிநிலத்தில் வெள்ள தணிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக எண்ணூர் முகத்துவாரம், கூவம் முகத்துவாரமான நேப்பியர் பாலம் அருகில், அடையாறு முகத்துவாரம், முட்டுக்காட்டு முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் ரூ. 38.50 கோடிக்கு 180 பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு அக்டோபரில் நிறைவடைந்துள்ளது. இப்பணிகளுக்கு 200 இயந்திரங்கள் சுமார் 80,000 மணியளவுக்கு பயன்படுத்தப்பட்டு, 1500 லாரிகள் கொள்ளளவு கொண்ட குப்பை, ஆகாய தாமரை போன்ற கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 

மேலும், மேற்கண்ட நீர்வழித்தடங்கள் மற்றும் முகத்துவாரங்கள் டிசம்பர் மாத இறுதி வரை கண்காணிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இந்தாண்டு ஏற்பட கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை என்றாலும் நீர் வழித்தடங்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரைகள், முகத்துவார அடைப்புகள், மழைநீர் வடிகால்கள் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகள் பருவமழைக்கு முன்பே முடிக்கப்பட்டது.

இந்த பணிகள் டிசம்பர் இறுதி வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும். அதே போல் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து