முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவில் இஸ்ரேல் வான்வழித்தாக்குதல்: 16 பாலஸ்தீனர்கள் பலி

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      உலகம்
Israel

Source: provided

காஸா: வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஜபாலியா நகரில் நேற்று முன்தினம் இரவு அல்-நஜ்ஜார் என்பவர் வீட்டின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர்.

மேலும், காஸா நகரின் அல்-தாபியின் பள்ளிக்கு அருகில் உள்ள அல்-சாய்துனியா குடும்பத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு காரணமாக மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு காசாவில் ஒரு தனி சம்பவத்தில், ஜபாலியா பகுதியில் பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்கியதில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், வடக்கு காஸாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலையில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு துணை மருத்துவர் கொல்லப்பட்டதாகக் கூறியது.

2023 அக்டோபர் 7-ம் தேதி அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்க காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக இருந்தனர்

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 45,097 ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து