முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு மெக்சிகோவிலில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      உலகம்
Mexico-2024-12-19

மெக்சிகோ, தெற்கு மெக்சிகோவிலில் இருந்து எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில்  குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கலைத்தனர்.

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள கடும் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கான சட்ட விரோத புலம் பெயர்வோர் தெற்கு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் நுழையும் பயணத்தை தொடங்கியுள்ளனர். வறுமை, பொருளாதார வீழ்ச்சி, உள்நாட்டு குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவது தொடர்ந்து வருகிறது. தாம் அதிபராக பதவியேற்ற உடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர் மக்களையும், ராணுவத்தின் உதவியோடு நாடு கடத்த போவதாக டொனால்ட் டிரம்ப் அண்மையில் அதிரடியாக அறிவித்தார்.

ஆனால் அவரது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தெற்கு மெக்சிகோவில் பல்லாயிரம் சட்டவிரோத புலம் பெயர்வோர் கூடினார்கள். வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினார்கள். புலம்பெயர் மக்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளை தடுத்து குறுக்கு வழியாக அமெரிக்காவும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் பேர் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள்.

மெக்சிகோ எல்லை வழியாக நுழையும் சட்டவிரோத குடியேறியவர்கள் தடுக்க தமது முந்தைய ஆட்சியில் டிரம்பால் முழுமையாக இயலவில்லை. ஆனால் 2-வது முறையாக தாம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற போவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், தற்போது அதிபர் ஜோ பைடன் அரசு கடைபிடிக்கும் புலம்பெயர் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர இருப்பதால் புலம்பெயர் மக்கள் அச்சமடைந்த இருக்கிறார்கள். இந்நிலையில் தெற்கு மெக்சிகோவிலில் இருந்து எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில்  குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கலைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து