முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு, சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்டம் இன்று திறந்து வைக்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.மாவட்டம் முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் செலவில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக ஈரோட்டுக்கு கிளம்பினார். ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையிலிருந்து கிளம்பி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைக்கிறார். நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் உருவசிலை என மாவட்டம் முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் செலவில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

இதைப்போல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்டம் முழுவதும் ரூ.133 கோடியே 66 லட்சம் செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதன்படி ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதல்வர் வருகையை முன்னிட்டு ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து