முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா      அரசியல்
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் நீதிபதி மனோஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவிற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி, அவரை வரும் 24-ம் தேதி விசாரணைக்கு அழைத்துள்ளோம் எனவும், அவரது கோரிக்கை மனுவும் அன்றைய தினம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதே சமயம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த பிறகே தேர்தல் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, புகழேந்தியின் கோரிக்கை மனுவை விரைந்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அதோடு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து