முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் 2-வது கோடி பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      தமிழகம்
CM-1-2024-12-19

ஈரோடு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2-வது கோடி பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக ஈரோட்டுக்கு கிளம்பினார். ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பெருந்துறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக 20 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான அதே பகுதியை சேர்ந்த சுந்தராம்பாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

இந்த திட்டத்தின்படி பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருக்கும். இந்த திட்டத்தின் 50வது லட்சம் பயனாளிக்கு சித்தலம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். 60-வது லட்சம் பயனாளிக்கு மைட்டாபட்டியிலும், 75-வது லட்சம் பயனாளியான நாமக்கல் மாவட்டம் போதமலையிலும், 80வது லட்சம் பயனாளிக்கு சைதாபேட்டையிலும், 90வது லட்சம் பயனாளிக்கு சென்னை விருகம்பாக்கத்திலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகம் வழங்கினார்.1 கோடியாவது பயனாளிக்கு திருச்சியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை சமீபத்தில் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து