முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வின் வீடியோ வெளியீடு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      விளையாட்டு
Ashwin-2024-08-29

Source: provided

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பயிற்சியாளர் சோகம் தேசாய், பகுத்தாய்வாளர் ஹரி பிரசாத் மோகன், மருத்துவ உதவியாளர் அருண் கனடே இவர்களுடன் அஸ்வின் செய்த குறும்புத்தனத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆடுகளத்திலும் சரி அதற்கு வெளியேவும் அனைவரிடமும் நன்றாக பழகுபவர் அஸ்வின். பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்குப் பிறகு ஓய்வை அறிவித்துள்ள அஸ்வினுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளர்களுக்கு பந்துவீச்சி பயிற்சியளித்த விடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அதில், “ஆடுகளத்தில் கணக்கற்ற நினைவுகள் மட்டுமல்ல இதுபோன்ற பல கணங்களும் அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நினைவுகூரப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 38 வயதான அஸ்வின் டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு அறிவித்தது மனநிம்மதியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக சென்னை வந்தடைந்த அஸ்வின் பேட்டியளித்துள்ளார். 2025 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்.

பிபிஎல் தொடரில் ஷாஹீன் ஷா 

பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி முதல்முறையாக பிபிஎல் (வங்கதேச பிரீமியர் லீக்) தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஃபார்ட்யூன் பரிஷல் அணிக்காக வரவிருக்கும் சீசனில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ஆவது பிபிஎல் தொடர் வரும் டிச.30ஆம் தேதி தொடக்குகிறது. இதில் ஜன.15 வரை விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது. 24 வயதாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 31 சர்வதேச டெஸ்ட்டில் 116 விக்கெட்டுகளும் 57 ஒருநாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளும் 75 டி20களில் 100 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

பிபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடவிருக்கிறார். ஃபார்ட்யூன் பரிஷல் அணியில் கைல் மேயர்ஸ், டேவிட் மலான், முகமது நபி, ஃபஹீம் அஸ்ரஃப், அலி முகமது, ஜகந்நாத் கான், ஜேம்ஸ் ஃபுல்லர், பதும் நிசங்கா, ஆண்ட்ரே பர்கர் ஆகியோரும் நேரடியான ஒப்பந்தத்தில் விளையாடவிருக்கிறார்கள்.  பிபிஎல் தொடரில் 7 அணிகள் விளையாடுகின்றன. டிச.30 - பிப்.7ஆம் தேதிவரை இந்தப் போட்டிகள் நடைபெறும். 24 வயதில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் 329 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேசவ் மகராஜ் விலகல்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 2 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரை தென்னாபிரிக்க அணி வென்ற நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.  இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் காயத்தால் விலகுவதாக கேசவ் மகராஜ் தெரிவித்துள்ளார். அவருக்கு பிஜோன் ஃபோர்டின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தால் விலகும் கேசவ் மகராஜ், டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்க்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும், லண்டனில் நடக்கும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

பிஜிடி தொடர் குறித்து ஹேசில்வுட் 

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் முழங்கால் காயத்தால் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகியது விரக்தியாக இருப்பதாக இருப்பதாகக் கூறியுள்ளார். பிரிஸ்பேனில் ஏற்பட்ட காயத்தினால் தொடரிலிருந்து விலகியது குறித்து சேனல் செவனுக்கு அளித்த பேட்டியில் ஹேசில்வுட் கூறியதாவது: நிஜமாகவே விரக்தியாக இருக்கிறது. டெஸ்ட்டில் விளையாட அனைத்து கட்டங்களையும் சரியாக நிரப்பி வந்தேன். மீண்டும் என்னாலே இந்த காயம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இது தொடர்பின்றி உருவான பின்கால் தசைப் பிடிப்பாக இருக்குமென நினைக்கிறேன். நிச்சயமாக பிரச்னையென்ன என்பதை ஆழகாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எனக்கு முழங்கால் தசைப்பிடிப்பு, சைடு ஸ்டிரைன் (பக்க தசை திரிபு) என்ற 2 பிரச்னைகள் பலகாலமாக இருந்து வருகின்றன. முக்கியமாக 4 வருடங்களில் இது பல தொடர்களில் இருந்து வெளியேற்றுகிறது. இருப்பினும் உடற்பயிற்சி கூடத்தில் சென்று இதை சரியாக்குவேன்.  கடைசி 12 மாதங்களில் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறேன். இது வெறுமனே 2-3 வாரங்களுக்கான காயம். ஆனால், இதனால் மிகப்பெரிய போட்டிகளை இழப்பது விரக்தியாக இருக்கிறது. அடுத்து இலங்கை தொடரில் விளையாடுவதுதான் திட்டம். அதனால், அடுத்த சில வாரங்களுக்கு எதுவும் அவசரப்படுத்தாமல் இருக்க வேண்டும். இன்னும் சில நாள்கள் அங்குமிங்குமாக சில விஷயங்களை செய்து எல்லாவற்றையும் சரியாக்க வேண்டும் என்றார். 33 வயதாகும் ஹேசில்வுட் 72 டெஸ்ட் போட்டிகளில் 279 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து