எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.
அதன்படி, 2024-25ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு., கோவை மாவட்டம் காரமடை வட்டத்தில் சிக்காரபாளையம் - கருப்பராயன் நகர் சாலை ஏலருமல்பள்ளம் ஆற்றில் ரூபாய் 2 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் மலட்டாறு ஆற்றில் திருவாமூர் ஊராட்சியில் ரூபாய் 8 கோடியே 13 லட்சத்து 44 ஆயிரம் செலவில் ஒரு பாலம். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் குடகனாறு ஆற்றில் மணலூர் ஊராட்சியில் சித்தரேவு தாண்டிக்குடி சாலையில் ரூபாய் 8 கோடியே 52 லட்சத்து 69 ஆயிரம் செலவில் ஒரு பாலம். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் நலுங்கு பாறை ஆற்றில் வாச்சாத்தி அரசநத்தம் இடையில் ரூபாய் 3 கோடியே 83 லட்சம் செலவில் ஒரு பாலம்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் செல்லபூரம்மன் ஓடையில் ரூபாய் 5 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் கொரட்டி ஆற்றில் ரூபாய் 5 கோடியே 57 லட்சம் செலவில் ஒரு பாலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு ஆற்றில் ரூபாய் 4 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் வேப்பனப்பள்ளி தீர்த்தம் சாலை கத்திரிபள்ளியில் ரூபாய் 7 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் செலவில் ஒரு பாலம். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் ஒட்டப்பள்ளி பட்டிபடுகு சாலையில் ரூபாய் 3 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் செலவில் ஒரு பாலம். மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் பதினெட்டாம்குடி ஓடையில் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டத்தில் புதுபட்டி கெடமலை சாலையில் 3 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். புதுப்பட்டி அதே சாலையில் 2 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மற்றொரு பாலம். சேலம் மாவட்டம், பி.என்.பாளையம் வட்டத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 3 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
ஆத்தூர் வட்டத்தில் துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். கங்கவள்ளி வட்டத்தில் வேப்படி பாலக்காடு சாலையில் 1 கோடியே 74 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். அயோத்தியாபட்டினம் வட்டத்தில் திருமணிமுத்தாரில் 1 கோடியே 99 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். பி.என்.பாளையம் வட்டம் வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 5 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
அதே பி.என்.பாளையம் வட்டம் இடையாப்பட்டி ஊராட்சியில் வசிஸ்டர் ஆற்றில் குறுக்கே 3 கோடியே 76 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் தாவணி - மல்லிக்கோரை சாலையில் 3 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டத்தில் தாராபுரம் வெள்ளக்கோவில்சாலை அமராவதி ஆற்றில் 14 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பட்டுவனாச்சி ஓடையில் 4 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுக மங்களம் சாலையில் 3 கோடியே 36 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் டி.புதுபட்டி சின்னையபுரம் சாலையில் 3 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உப்பாறு ஆற்றில் குறுக்கே இரத்தினகுடிசாலை ஆர்.வளவனூர் ஊராட்சியில் 10 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் களத்தில் வென்றார் பேட்டை சாலையில் நந்தியூர் கால்வாயில் 10 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் புல்லம்பாடி வைக்கல் புரந்தகுடி - ரெத்மாங்குடி சாலையில் குறுக்கே 2 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் வெங்கடாசலபுரம் பிராஞ்சேரி சாலையில் சித்தாறு ஆற்றில் 10 கோடியே 63 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 36 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பொய்கை கிராமத்தில் சதுப்பேரி கால்வாய் குறுக்கே 1 கோடியே 65 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். விழுப்புரம் மாவட்டம், மரக்கானம் வட்டம், அன்னம்புதூர் - ஓமந்தூர் சாலையில் நரசிம்மனாறு ஓடையின் குறுக்கே 5 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், சிறுவாடியில் செஞ்சி ஆற்றில் குறுக்கே 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.
விழுப்புரம் மாவட்டம், வள்ளம் வட்டத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கொங்கராபட்டு - மணியம்பட்டு இடையே 9 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கணக்கநேந்தல் - ஜோகில்பட்டி இடையே குண்டாறு ஆற்றின் குறுக்கே 9 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம். இந்தப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
உலக கேரம் சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
18 Dec 2024சென்னை, உலக கேரம் சாம்பியனான காசிமாவுக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: வாக்கெடுப்பில் பங்கேற்காத பா.ஜ. எம்.பி.க்கள் 20 பேருக்கு நோட்டீஸ்
18 Dec 2024டெல்லி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத பா.ஜ.க. எம்பிக்களுக்கு அக்கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குகேஷின் பரிசுத்தொகைக்கு 4 கோடி ரூபாய் வரிபிடித்தம்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்
18 Dec 2024சென்னை, உலக செஸ் சாம்பியன் குகேஷ் பரிசுத் தொகைக்கு ரூ.4 கோடி வரியா என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
-
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பொதுத்தேர்வில் தமிழ் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு : தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2024சென்னை : மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா : அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும்
18 Dec 2024மாஸ்கோ : ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஹெட் விளையாடுவது சந்தேகம்?
18 Dec 2024இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
-
கவர்னர் மாளிகை முன்பு காங்கிரசார் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது
18 Dec 2024சென்னை : கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வப்பெருந்தகை உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு காங். சார்பில் பிரியங்கா பெயர் பரிந்துரை
18 Dec 2024டெல்லி : பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.
-
ஓய்வெடுப்பதற்காக ஐதராபாத் வந்தார் ஜனாதிபதி முர்மு
18 Dec 2024ஐதராபாத் : குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள மாளிகைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வந்தடைந்தார்.
-
ஆஸ்திரேலியா அருகே வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலி
18 Dec 2024ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவில் உள்ள வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மணிப்பூர் மோதலில் 240 பேர் உயிரிழப்பு
18 Dec 2024இம்பால் : மணிப்பூரில் நடந்த மோதலில் 240 பேர் கொல்லப்பட்டதால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
18 Dec 2024பிரிஸ்பேன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
காங்கோவில் பயங்கரம்: படகு ஆற்றில் கவிழ்ந்து 25 பேர் பரிதாபமாக பலி
18 Dec 2024காங்கோ, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் படகில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர்,
-
மும்பையில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி
18 Dec 2024மும்பை : மும்பையில் இருந்து எலிபெண்டா தீவுக்கு 80 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதில் 66 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்தது
18 Dec 2024சென்னை, தங்கம் சவரனுக்கு நேற்று ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான தமிழக அரசின் நலத்திட்டங்கள் என்ன? அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்
18 Dec 2024சென்னை, தி.மு.க. ஆட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் என்னென்ன என்று அமைச்சர் மதிவேந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
-
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்
18 Dec 2024சென்னை : அம்பேத்கர் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை என்று தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்
-
அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்: பா.ஜ.க. மீது ராகுல் தாக்கு
18 Dec 2024டெல்லி : பா.ஜ.க.வினர் அம்பேத்கருக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல்
18 Dec 2024சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
-
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
18 Dec 2024சென்னை : சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு
18 Dec 2024டெல்லி : பாராளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
-
தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி சொத்துகள் மீட்ட இந்து சமய அறநிலையத்துறை
18 Dec 2024சென்னை : சென்னை தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கருக்கு எதிரானது பாதிய ஜனாதா இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
18 Dec 2024டெல்லி : பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கருக்கு எதிரானது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கருக்கு எதிராக செயல்படுவதாகவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா விம
-
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் 2 நாட்கள் நீதிமன்ற காவல்: கோர்ட்
18 Dec 2024தேனி, சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சர்வதேச விண்வெளியில் இருந்து சுனிதாவை மீட்கும் பணி மேலும் தாமதம்
18 Dec 2024அமெரிக்க சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட 2 விண்வெளி வீரர்களை மீட்கும் பணி மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.