முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் நடந்த விபத்தில் 52 பேர் பலி

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      உலகம்
Accident-1

Source: provided

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 2 வெவ்வேறு பேருந்து விபத்துகளில் மொத்தம் 52 பேர் பலியாகியாகியுள்ளனர்.

கசினி மாகாணத்திலுள்ள ஷாபாஸ் கிராமத்தின் அருகே  நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்டமான அண்டாரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து லாரியில் மோதி 2-வது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த 2 விபத்துகளிலும் மொத்தமாக 52 பேர் பலியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு விபத்திலும் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இவ்விரு விபத்துகளில் 65 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மீட்புப்படையினர் விபத்து நடந்த இடங்களுக்கு வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், ஓட்டுநரின் அலட்சியப்போக்கினாலும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததினாலும் அந்நாட்டில் வாகான விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இதேபோல் கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணத்தில்  பேருந்து ஒன்று எரிபொருள் ஏற்றி வந்த லாரியின் மீது மோதியதில் 20 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து