முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்: இன்டியா கூட்டணி சார்பில் சென்னையில் மவுன ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Manmohan 2024-12-29

Source: provided

சென்னை : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்டியா கூட்டணி சார்பில் சென்னையில் மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்டியா கூட்டணி தமிழக தலைவர்கள் சார்பில் சென்னையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், சென்னை அண்ணா சாலை வெலிங்டன் பிளாசாவில் தொடங்கி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை உரையாற்றும்போது, “இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதி அமைச்சர், உலக வங்கி இயக்குநர் என எந்தப் பதவியையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருடைய திறமை, உண்மை, நேர்மைக்கு பதவிகள் அவரை வந்து சேர்ந்தன. அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு பேரிழப்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். அவரது புகழ் என்றும் நிலைக்கும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து