முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழக மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? - நாம் தமிழர் சீமான் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
Seaman 2024-02-17

Source: provided

சென்னை : பல்கலை. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? என்று நாம் தமிழரம் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நான் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீமானை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 

அவர் கூறியதாவது; சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி என்னை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தேவையற்ற ஒடுக்குமுறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இன்று (நேற்று) மட்டும் கைதுசெய்தது ஏன்? நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரியாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது.

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? போராடவும் பேசவும் அனுமதி மறுப்பது ஏன்? நீங்கள் நடத்தினால் போராட்டம்.. நாங்கள் நடத்தினால் நாடகமா? யார் அந்த சார்? குற்றம் நடக்கும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் போவது எப்படி? எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுகவுக்கு இப்போது என்ன ஆனது?நீங்களும் கேள்வி கேட்கமாட்டீர்கள், எங்களையும் கேட்க விடுவதில்லை. யாரும் இதைப்பற்றி பேசக்கூடாது என அண்ணா பல்கலை. விவகாரத்தை மறக்கடிக்க வேண்டும் என சொல்வது ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து