முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம்: ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
CCTV

Source: provided

ராமேஸ்வரம் : ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்து தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராஜேஷ் கண்ணன்( 34) மீரான் மைதீன்( 38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கி உள்ளனர். நிறைய பெண்களை இவர்கள் படம் பிடித்து உள்ளதால் அதுதொடர்பான வீடியோக்களை வைத்து யாரையும் மிரட்டினார்களா அல்லது வலைத்தளங்களிலோ, வேறு யாருக்கும் பகிர்ந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிகோ முன்னிலையில் போலீசார், ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையை பூட்டி சீல் வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து