முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே டிராபி தொடர்: தமிழகத்தை வீழ்த்திய விதர்பா

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

விசாகப்பட்டினம் : விஜய் ஹசாரே டிராபி தொடரில் கருண் நாயர் சதத்தால் தமிழகத்தை வீழ்த்திய விதர்பா அணி வெற்றிப்பெற்றது.

ஆண்டுதோறும்.... 

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம் - விதர்பா அணிகள் ஆடின.

256 ரன்களுக்கு... 

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற விதர்பா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட் வீழ்த்தினார்.

கருண் நாயர் அபாரம்...

இதையடுத்து 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய விதர்பா 43.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விதர்பா தரப்பில் நிதானமாக ஆடிய கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து