முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2-ம் தேதி சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

சென்னை : வரும் 2-ம் தேதி சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

சென்னை அண்ணா மேம்பாலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சூழ்ந்த நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் திறந்து வைத்தார். ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப் படுகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன. ஊட்டியை போன்றே இங்கும் மலர் கண்காட்சி நடத்தப் பட்டு வருகிறது.

ஊட்டியில் நடக்கும் மலர்க் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்ததுதான் இந்த பூங்கா. பூத்துக்குலுங்கும் மலர்களுடன் செம்மொழிப் பூங்கா இந்த ஆண்டு மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டில் 10 நாட்கள் நடந்த மலர்க் கண்காட்சியை லட்சக்கணக்கானவர்கள் கண்டு ரசித்தனர். கடந்த ஆண்டில் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் விதவிதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது. பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்லப் பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மலர்க் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருட்டிணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. பெட்டூனியா, ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. வேளாண்மைத் துறையின் தோட்டக்கலைத் துறையிலிருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் கொண்டு வரப்படுகிறது. ஓசூரில் இருந்து தனித்துவமான ரோஜாச் செடிகள் கொண்டு வரப்பட உள்ளது.

வருகிற 2-ம் தேதி மலர்க் கண்காட்சியை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர்க் கண்காட்சியை பார்வையிடலாம். 

மலர்க் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக கடந்த ஆண்டை போலவே ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. தற்போது மலர்க் கண் காட்சிக்கான பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. எனவே பூங்காவுக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து