முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியல்: தீப்தி சர்மா முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று (டிசம்பர் 30) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முன்னேறியுள்ளார்.

6 விக்கெட்டுகள்...

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் தீப்தி சர்மா சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 2 போட்டிகளில் தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

5-வது இடத்தில்... 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா ஐசிசி ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார். பேட்டிங்கை பொருத்தவரையில், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நான்கு இடங்கள் முன்னேறி, 22-வது இடத்தில் உள்ளார். 

41-வது இடத்தில்... 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 29 ரன்கள் மற்றும் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். ரிச்சா கோஷ் ஏழு இடங்கள் முன்னேறி 41-வது இடத்தில் உள்ளார். ஹர்மன்பிரீத் கௌர் மூன்று இடங்கள் சறுக்கி 13-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோனும், பேட்டிங்கில் தென்னாப்பிரிக்க வீராங்கனை லாராவும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து