முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. வீரர் டிராவிஸ் வெற்றி கொண்டாட்டத்தால் சர்ச்சை

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia-1 2024-06-21

Source: provided

மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது.

முகம் சுழிக்க...

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரிஷப் பந்த் விக்கெட்டினை வீழ்த்திய ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் வித்தியாசமான கொண்டாட்டம் இந்தியர்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலரும் ”இது ஆபாசமான கொண்டாட்டம்” என டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.

நகைச்சுவையானது... 

இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: நான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன். டிராவிஸ் ஹெட் விரல் சூடாக இருப்பதால் ஒரு கோப்பை ஐஸ் கட்டியில் வைக்க வேண்டும். அதுதான் இது. அது வழக்கமாக எங்களுக்குள் நடக்கும் நகைச்சுவைதான். இது ஏற்கனவே காபா அல்லது வேறு எங்கோ கூட ஹெட்டுக்கு விக்கெட் விழுந்தபோது நேராக குளிர்சாதனபெட்டிக்கு சென்று ஐஸ் பக்கெட்டினை எடுத்து அதில் விரலை விட்டு நாதன் லயனுக்கு முன்பாக நடந்தார். அதுபோலத்தான் இது நகைச்சுவையானது. இதுவும் அதுவாகத்தான் இருக்கும், வேறெதுவும் இல்லை என்றார். போட்டிக்குப் பிறகு டிராவிஸ் ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ் கோப்பையில் விரலை விட்டபடி இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அவர் ஏற்கனவே இதுபோல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து