முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரவரிசையில் வைஷாலி முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      விளையாட்டு
Vaishali-Pragnananda 2023-1

Source: provided

 உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்துள்ளார். 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் வைஷாலி முதலிடத்தை பிடித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்றுக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார். நாக் அவுட் சுற்றில் சீன வீராங்கனையை வைஷாலி எதிர்கொள்கிறார்.

_______________________________________________________________________________________________

சிறந்த டெஸ்ட் அணி தேர்வு 

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும், நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் தேர்வு செய்த 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை கொண்டு அணியை உருவாக்கியுள்ளது.

அதில் இந்திய வீரர்களான ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராகவும், பும்ராவை கேப்டனாகவும் தேர்வு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான கம்மின்சை ஒரு வீரராக கூட தேர்வு செய்யவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்த டெஸ்ட் அணி விவரம் பின்வருமாறு:- பும்ரா (கேப்டன்), ஜெய்ஸ்வால், பென் டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி புரூக், கமிந்து மென்டிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மேட் ஹென்ரி, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேஷவ் மகராஜ்.

_______________________________________________________________________________________________

ரோகித் குறித்து ரவிசாஸ்திரி

நல்ல பிட்னஸ் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாட தகுதியுடையவர் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா பேட்டிங்கில் திணறுவதால் ஓய்வு பெறலாம் என்று சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி இன்னும் சில காலம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அவுட்டாகும் விதத்தை மறந்து விடுங்கள். அதையும் தாண்டி இன்னும் 3 - 4 வருடங்கள் விளையாட முடியும். ஆனால் ரோகித் சர்மா கவலைக்குரியவராக இருக்கிறார். 

எனவே ஓய்வு என்பது அவருடைய முடிவு. ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடும் அவரின் புட் ஒர்க் முன்பு போல் இல்லை. அதனால் அவர் பந்தை மிகவும் தாமதமாக எதிர்கொள்கிறார். எனவே இந்தத் தொடரின் இறுதியில் ஓய்வை அறிவிப்பது அவருடைய முடிவு" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து