முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு : விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
polies

Source: provided

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை தமிழக காவல்துறை வழங்கி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதி மீறல்களில் ஈடுபட்டால் ஏ.என்.பி.ஆர். கேமரா மூலமாக கண்டறிந்து, தாமாகவே வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு,  குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்,  சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ஏ.என்.பி.ஆர். கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுவதுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து