முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: தென் ஆப்பிரிக்கா முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      விளையாட்டு
South-Africa 2023-12-24

Source: provided

செஞ்சூரியன் : பாகிஸ்தானை வீழ்த்தி 2025 ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியது.

சுற்றுப்பயணம்... 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 211 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 301 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 59.4 ஓவர்களில் 237 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், சாத் ஷகீல் 84 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

148 ரன்கள் இலக்கு...

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்று முன்தினம் 3வது நாள் முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 22 ரன்களுடனும், கேப்டன் பவுமா ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் மார்க்ரம் 37 ரன்னிலும், பவுமா 40 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதில் டேவிட் பெட்டிங்ஹாம் 14 ரன்னிலும், கைல் வெர்ரையன் 2 ரன்னிலும், கார்பின் போஷ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

திரில் வெற்றி... 

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதையடுத்து பாகிஸ்தானின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. தொடர்ந்து ரபாடா மற்றும் மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடின. இறுதியில் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 39.3 ஓவர்களில் 8 விக்கெட்டை மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2025 ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து