முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

புதுடில்லி :  அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

8.5 புள்ளிகளுடன்.... 

அமெரிக்காவில், உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேஷியா வீராங்கனை ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு களம் இறங்கிய, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இதனால், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் பெற்றார்.

முதல்வர் பாராட்டு...

சாம்பியன் பட்டம் வென்ற, கொனேரு ஹம்பியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் செஸ் போட்டியில் சாதனை படைத்த ஜூடித் போல்கர், சூசன் போல்கர், விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொனேரு ஹம்பி?

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தான் கொனேரு ஹம்பி. இவருக்கு வயது 37. இவர் செஸ் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். 2012ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ராபிட் செஸ் உலக தொடரில் கொனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்றார். 2019ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியனாக வெற்றி பெற்றார்.

பிரதமர் மோடி பாராட்டு

பிடே மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- 2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கோனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து