முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. சிறந்த டி-20 வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பட்டியல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : ஐ.சி.சி. சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது 2024 பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பெயர் இடம்பெற்றுள்ளது.

சிறந்த வீரர் விருது...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு அவர்களுக்கு 'சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.

4 பெயர்களை... 

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. அதன்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

4 வீராங்கனைகள்...

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. அதன்படி இந்த பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சமாரி அத்தபத்து, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட், நியூசிலாந்தின் அமெலி கெர், அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா... 

நடப்பாண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை' விருதுக்கு தகுதியான வீராங்கனையை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது. அதில் ஒரே ஒரு இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட், இலங்கையின் சமாரி அத்தபத்து, ஆஸ்திரேலியாவின் அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து