முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34 வது நாளை கடந்த உண்ணாவிரதம்: பஞ்சாப் விவசாய சங்க தலைவரின் உடல் நிலை மேலும் மோசமானது

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      இந்தியா
Farmer-2024-12-02

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன (டிச. 29) 34வது நாளை எட்டியுள்ளது.

காந்திய வழியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டுமா? அல்லது போராட்டத்தை முடிக்க வேண்டுமா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் அபிமன்யு கோஹர் தெரிவித்தார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி - ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி முதல் இவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தில்லியை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். எனினும் அவர்கள் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் விவசாயிகள் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70), நவம்பர் 26 காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரின் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையான 34வது நாளை எட்டியுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் கானெளரி போராட்டக்களத்தில் இருந்தவாறு செய்தியாளர்களுடன் பேசிய விவசாய சங்கத் தலைவர் அபிமன்யு கோஹர், ''நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் எங்கள் போராட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது. தவறான செய்திகள் மூலம் அவதூறு பரப்புகிறது. போராட்டத்தின் முதல் நாளில் இருந்தே இதனைத் தெரிவித்து வருகிறோம். 

எங்கள் குரலை மத்திய அரசு கேட்பதில்லை. எங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. மத்திய அரசு இந்த அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறையிலும் எங்கள் போராட்டம் காந்திய வழியில் தொடர்கிறது. தல்லேவாலின் இந்தப் போராட்டம் தொடர வேண்டுமா? அல்லது முடிய வேண்டுமா? என்பதை அரசுதான் இப்போது முடிவு செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிய இப்போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். நாம் வெற்றியின் வாசலில் இருக்கிறோம். நாம் மிகவும் வலிமையாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இதற்கு தல்லேவால் தனது வாழ்க்கையை பணயமாக வைத்துள்ளார்'' எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து