முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 பேர்  கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.

அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்கு குழு அமைத்து தேவையான தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவு அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் 40 காவலாளிகளை நியமிக்கவும், ஏற்கனவே 140 காவலாளிகள் இருக்கும் நிலையில் எண்ணிக்கையை 180-ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவிகள் பாதுகாப்புக்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து