முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. சிறந்த மகளிர் டி-20 அணி: 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      விளையாட்டு
INDIA 2025-01-24

Source: provided

துபாய் : 2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ,சி.சி) அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

ஐ.சி.சி. கவுரவம்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

3 வீராங்கனைகள்...

அதன்படி கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்:

2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி விவரம் பின்வருமாறு:-லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமாரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து), மெலி கெர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா), மரிசேன் கேப் (தென் ஆப்பிரிக்கா), ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து), தீப்தி சர்மா (இந்தியா), சதியா இக்பால் (பாகிஸ்தான்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து