முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: சண்மும் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
CPIM- 2023-09-20

Source: provided

ராமநாதபுரம் : பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு ராமநாதபுரம் மாவட்ட வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்துக்கு வருகை தந்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:-

சிவகங்கை மாவட்டம் மேலபிடாவூரில் பட்டியல் இன இளைஞர் புல்லட் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக சாதி வெறியர்களால் அவரது கைகள் வெட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படுவது தமிழகத்துக்கு இழுக்கு. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சாதிய வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். உரிய காலத்தில் இதுபோன்ற வழக்குகளை விசாரணை செய்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் படிப்படியாக மதுபான கடைகளை மூட வேண்டும். பள்ளிகள், கோயில்கள் முன்பு உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது. ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைகளைில் ஈடுபட்டால் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். கல்வி நிலையங்களில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது, பாஜக அரசு உள்நோக்கத்தோடு பிரதிபலனை எதிர்பார்த்து வழங்கப்பட்டது போல் தெரிகிறது. அதிமுக இன்னும் பல அணிகளாக உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து