முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட ஜெர்ஸியுடன் இந்திய வீரர்கள்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

கராச்சி : பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான ஜெர்ஸிக்களை அணிந்திருக்கும் இந்திய வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி... 

பாகிஸ்தானில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் திடல்களில் இந்தியாவின் தேசியக் கொடி புறக்கணிக்கப்பட்டது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் பெயர்...

இந்த நிலையில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பெயருடன் சாம்பியன்ஸ் டிராபி இலச்சினை அச்சிட்ட ஜெர்ஸிக்களை அணிந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐ.சி.சி. சிறந்த வீரர்களுக்கான தொப்பி வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் இந்த ஜெர்ஸியை அணிந்திருந்தனர். முதலில் பாகிஸ்தான் லோகோவை போட இந்திய அணி மறுத்திருந்த நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் சைக்கியா, ஐ.சி.சி.யின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியா - பாக் மோதல்...

அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதியும், இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து போட்டி மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. சமீப காலங்களில் பாகிஸ்தான் பெயரை இந்திய அணியினரின் ஜெர்ஸியில் போட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி போட்டியை நடத்திய பாகிஸ்தானின் பெயரைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து