முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. பேரவையில் கவர்னரை வெளியேற சொல்லி எதிர்க்கட்சியினர் கடும் அமளி கோ பேக் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      இந்தியா
Anandiben-Patel

Source: provided

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (பிப். 18) தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையுடன் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆனந்திபென் உரையாற்ற தொடங்கியவுடன், ’கோ பேக் கவர்னர்’ என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

சட்டப்பேரவை நடவடிக்கைக்கு இடையூறு அளிக்காமால் சுமுகமாக பட்ஜெட் தொடர் நடைபெற ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து