முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புது தில்லி: தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வருகின்றன.

இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பெயர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஞானேஷ் குமாரை தலைமைத் தோ்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். அதே போல, விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2023-இல் ஏற்படுத்தப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின்கீழ், இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டும் முறைக்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முறைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023-இன் 7-ஆவது பிரிவை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ஜிஓ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்துள்ளது. மேற்கண்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில், கடந்தாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 2023-ல் ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்கீழ், இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க நிராகரித்துவிட்டது. மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், 2023 சட்டத்தின்கீழ் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அவை இன்று (புதன்கிழமை - பிப். 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து