முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு முயற்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      தமிழகம்
Anbil 1

Source: provided

சென்னை : உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டினார்..

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "1986 க்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான பேச்சிற்கு பிறகு.. நமது மூச்சில் கலந்த மொழிப்போர் தியாகிகளின் உயிர் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் உங்களுடைய உருவின் இங்கு நின்று கொண்டுள்ளது.

தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி தருவேன் என்று 3 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழி கொள்கை எங்கு உள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நிதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

தமிழக பா.ஜ.க. தலைவர் வெளிநாட்டில் 6 மாத காலம் படித்துவிட்டு இப்போது பொய்யாக பேசி வருகிறார். அவர் தனது கையில்  அறிக்கை   ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை விட உ.பி.யும் பீகாரும் சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார். அந்த   அறிக்கை பா.ஜ.க.வின் ஒரு அஜெண்டா தான். உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.

நம் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு தருகிறது. இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என்று எக்ட்டதற்கு உங்களுக்கு கோவம் வந்ததே, இப்போது கேட்கிறோம் ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஆகவே எங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து