முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      உலகம்
Macron 2024-06-25

Source: provided

பிரான்ஸ் : உக்ரைனில் நீடித்து வரும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மேக்ரான் கூறியிருப்பதாவது, “உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ நாங்கள் விரும்புகிறோம். இதனை அடைய, ரஷியா தமது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

மேலும், உக்ரைன் மக்களுக்கு வலிமையான நம்பிக்கையளிக்கும் விதத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கிடவும் வேண்டும். இல்லையெனில், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அது ‘மின்ஸ்க் ஒபந்தங்கள்’ போல முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவோம். இதுவே சிறந்த வழி என்றார். மேலும், ஐரோப்பிய நாடுகள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்காக அதிகம் முதலீடு செய்தாக வேண்டுமென்ற கருத்திலும் உடன்படுகிறோம். ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவுகளை ஏற்று, அதன்படி உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அதற்கான முதலீட்டு நடவடிக்கைக்கான பணிகள் சுணக்கமின்றி நடைபெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து