முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 தேர்தலில் த.வெ.க.வுடன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      தமிழகம்
vijay 2025-01-06

Source: provided

சென்னை: 2026 தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம்பெறுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.

வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றை ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், தமிழக அரசியலில் களமிறங்கியிருக்கும் விஜய், தனது முதல் மாநாட்டிலேயே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், கொள்கை ரீதியாக பாஜகவை எதிரியாகவும், அரசியல் ரீதியாக திமுகவை தனது எதிரியாகவும் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது. மேலும், மாவட்ட நிர்வாகிகள், த.வெ.க. அணிகள் என கட்சி பணிகளில் தொடர்ந்து தீவிரமும் காட்டி வருகிறார்.

விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பலம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வரும் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது கூட்டணிக் குறித்து பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டணியில் இணையும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் த.வெ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் லிக் கட்சியின் தலைவர் முஸ்தபா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தி.மு.க. தொடர்ந்து இஸ்லாமிய மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் தி.மு.க.வின் சித்து விளையாட்டு எடுபடாது. அற்ப செயல்களில் ஈடுபடுவதை தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும். வாக்கு வங்கிக்காக சிலர் மூலம் இஸ்லாமியர்களை திசை திருப்ப தி.மு.க. சதி செய்தது. இஸ்லாமிய மக்களின் பக்கம் நின்றவர் விஜய். தனது கட்சியில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து