முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      தமிழகம்
Jail 2024-10-04

Source: provided

சென்னை: அ.தி.மு.க.  ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று  முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.  மகளிரணி செயலாளருமான பா.வளர்மதி  தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க.  அரசைக் கண்டித்து அ.தி.மு.க.  மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க.  மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க.  மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கிப் பேசியது: ''தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவிகள் முதல், பெண் காவலர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. கடந்த 100 நாளில் 63 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து தி.மு.க.  எம்பி கனிமொழியோ, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோ இதுவரை எதுவும் பேசவில்லை.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலில் தொந்தரவுகளால் அப்பா என்று கதறும் பெண் பிள்ளைகளின் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் பழனிசாமி மட்டும் தான் குரல் கொடுத்து வருகிறார். அவரது தலைமையில் அ.தி.மு.க.  ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று அவர் பேசினார்.

அதையடுத்து,  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. வினர் தங்களது கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு தி.மு.க.  அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.தி.மு.க.  மாவட்ட செயலாளர்கள், மாணவரணி நிர்வாகிகள் தி.மு.க.  அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து