முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக்குழு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      இந்தியா
Income-Tax 1

Source: provided

புதுடில்லி : புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா  நியமித்துள்ளார்.

மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஆய்வு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்தில், இதுவரையில் எண்ணற்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. மேலும், அதனை புரிந்துகொள்வதும் கடினமாகிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.  நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து