முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. பேச்சாளர்கள் பட்டியலில் வெளியீடு : வரும் 1-ம் தேதி பெரியகுளத்தில் இ.பி.எஸ். பேசுகிறார்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் மார்ச்- 1ம்தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ம் பிறந்தநாளையொட்டி வரும் 25 ம்தேதி முதல்வர் 1 ம்தேதி வரை இடைவிடாமல் பொதுக்கூட்டங்களை நடத்த கட்சியினருக்கு அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் படி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

வரும் 26ம்தேதி  ராயபுரத்தில் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஆலங்குளம் தொகுதியில் - முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ , சிதம்பரத்தில்  முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , விராலிமலையில் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அந்தியூர் தொகுதியில் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,   அம்பாசமுத்திரக்தில்  – முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, ஆலந்துாரில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைசெயலாளர்  – நடிகை விந்தியா பேசுகிறார்.

திட்டக்குடியில்  – நடிகர் மனோஜ்குமார்,  வரும் 27 ம்தேதி  ராஜபாளையத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர்  – தமிழ்மகன் உசேன்,  திருச்சி ( கிழக்கு) யில் கே.பி.முனிசாமி, துாத்துக்குடியில்  – திண்டுக்கல் சீனிவாசன்  திருச்செங்கோட்டில்  – முன்னாள் அமைச்சர் தங்கமணி , திருமங்கலத்தில் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , ஆகியோர் பேசுகின்றனர் , வரும் 25ம்தேதி  கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன்  மற்றும் எம்எஸ்எம் ஆனந்தன் மற்றும் கோவை புரட்சித்தம்பி ஆகியோர் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதே போல் வரும் மார்ச் 1 ம்தேதி தாம்பரம் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து