முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெறுவதே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தரும் சிறந்த பிறந்த நாள் பரிசு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
Udhayanidhi

Source: provided

சென்னை : 2026-ம் ஆண்டில் 200 தொகுதிகளிலும்  தி.மு.க. கூட்டணியை ஜெயத்து காட்டுவது தான் முதல்வர் ஸ்டாலின் தர இருக்கும்  பரிசு தான் சிறந்தது என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

தி.மு.க. தலைவரும்  தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான ஜெர்சி அறிமுக விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது- 

இந்த விளையாட்டு மேம்பாட்டுஅணியை பார்க்கும்போதெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். எனென்றால் எல்லோருமே ஸ்போர்ட்ஸ்மேன். எல்லாரும் பாடி பில்டர்ஸ். இங்கே கூட சொன்னார்கள். நிறையபேர் ஜெர்சி போட்டு வரவில்லை. அவர்களுடைய அளவிற்கு ஜெர்சி கிடைக்க வில்லை என்று. அதே நேரத்தில் எங்களுக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும் .ஏன்னா, எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்கின்ற அணி, நம்முடையவிளையாட்டு மேம்பாட்டு அணி. ரொம்ப வசதியான அணி. பொதுவாக விளையாட்டு போட்டி என்றால் வெற்றி பெறுகின்ற அணிக்கு பரிசுத்தொகைதருவார்கள். இல்லையென்றால் பரிசுப் பொருட்கள் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு இந்த போட்டியில் பார்த்தீர்கள் என்றால் இரண்டையும் சேர்த்து கொடுத்துள்ளார்கள். 

புதிதாக அணிகள் உருவாகலாம். ஆனால் ஜெயிக்க போவது, கப்அடிக்கபோவது நம்முடைய தலைவர் அவர்கள் தலைமையிலான, மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி அணி என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.ஏன்னா, தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தது என்றென்றைக்கும் மனதிற்குநெருக்கமான அணி என்றால் முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க.  அணிதான். ஒரு போட்டின்னா அதற்கு தயாரிப்பு – பயிற்சிகள் அவசியம்.

இந்த போட்டிக்கு மட்டுமில்ல வருகின்ற 2026 சட்டமன்றதேர்தல்ங்கிற மிகப்பெரிய போட்டிக்கும் இப்போதிலிருந்தே பயிற்சிகளையும், வார்ம் அப்களையும் நாம் ஆரம்பிக்க வேண்டும். எப்படி இந்தப் போட்டியில நீங்க அணி – அணியா போட்டி, போட்டு விளையாடுறீங்களோ. அதே மாதிரி, 2026 தேர்தலுக்கும் நாம் அணி அணியா உழைக்கணும். மக்களை சந்திந்தாக வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி தொடங்கி 26 மாதங்கள்ல 200-க்கும் அதிகமான போட்டிகளை நடத்தி இருக்கிறதா சொன்னாங்க. குறைந்தது 200, 200 க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் ஜெயித்து காட்ட வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் சொல்லியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து காட்டுவதுதான் தலைவருக்கு அளிக்க கூடிய உண்மையான சிறந்த பிறந்தநாள் பரிசு. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து