முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்கூட்டணி என்று நாங்கள் சொல்வதை நீருபிக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் குரலே பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      தமிழகம்
CM 2024-12-21

Source: provided

சென்னை : பழனிசாமியின்  குரலே, பா.ஜ.க.விற்கானடப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி என்று சொல்வதை நிரூபிக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான.மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உங்களில் ஒருவன் நிகழ்ச்சி வாயிலாக தெரிவித்ததாவது.,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்களில் ஒருவன் பதில்கள்மூலமாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆரம்பிக்கலாமா  

தலைவர் – முதல்வர்... இப்போது “அப்பா” என்று அழைக்கிறார்களே?கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், “தலைவர்” என்று அழைக்கிறார்கள்.முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், “முதல்வர்” என்றும் அழைக்கிறார்கள்...இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை “அப்பா” என்று அழைப்பதைக்கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது... காலப்போக்கில் மற்ற பொறுப்பில்எல்லாம் வேறுயாராவது வருவார்கள்... ஆனால், இந்த “அப்பா” என்ற உறவுமாறாது. அந்தச்சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன்... நான்\இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்குஉணர்த்துகிறது!

2. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது... தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்னநன்மை கிடைத்திருக்கிறது?

தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மைகிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டைமுழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்குஎந்த நிதியும்இல்லை! பெயர்கூட சொல்வதில்லை.மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும்,தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும்தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தேதிட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்... மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல\திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்புகிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்!நம்முடைய மாணவர்கள்ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதாஎன்று கேட்கத் தோன்றுகிறது!

4. ⁠கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா?

கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன்.முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்துஇடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது,ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான்.2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச்சந்தித்துக் கொண்டு வருகிறோம்.பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பதுதி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள்நட்புறவில் எந்தப்பாதிப்பும் இல்லை.

5. ⁠டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்றுஎதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

நான் ஏற்கனவே சொன்னதுதான்... பழனிசாமி அறிக்கைகளைப் பார்த்தால்,பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கானடப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி.அவ்வளவுதான்! இதையெல்லாம்பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப்பற்றியோசித்துப் பார்க்க வேண்டும்!

# மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைஅறிவித்திருக்கிறார்களே?

மிகவும் காலதாமதமான முடிவு இது. அந்த மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அவராகப் பதவிவிலகவில்லை. வேறுவழியில்லாமல் பதவி விலகியிருக்கிறார். இரண்டு ஆண்டுகாலமாகமணிப்பூர் பற்றி எரிந்தது. 220 பேருக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். மாநிலத்தின் முதலமைச்சர் மேல்நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசுபத்திரமாகப்பாதுகாத்து வைத்திருந்தார்கள். நடந்த வன்முறையின் பின்னணியில்மாநிமுதலமைச்சரே சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று, இப்போதுஅவர் பேசிய ஆடியோவெளியாகி இருக்கிறது. அதைப் பற்றிவிசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும்உத்தரவிட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுமே அவருக்கு எதிராகத்திரும்பிவிட்டார்கள். இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் அவரை இராஜினாமா செய்யவைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கிறார்கள்.பா.ஜக. ஆளும் மணிப்பூராக இருந்தாலும், உத்தர பிரதேசமாகஇருந்தாலும் இந்தஅளவில்தான் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் அடுத்தமாநிலத்தைபற்றிக் கூச்சமில்லாமல் பேசுகிறார்கள்.நம்மை பொருத்தவரை, மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களைக்காக்கும், மக்கள் விரும்பும்மக்களாட்சி அமைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து