முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் : அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      இந்தியா
Jaishankar 2023 04 09

Source: provided

புதுடெல்லி : நாங்கள் சிறப்பாக வாக்களிக்கிறோம், எங்களின் ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், நார்வே பிரதமர், வார்சா மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குழு விவாதத்தில் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது,  மேற்கத்திய ஜனநாயகம் குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "ஒப்பீட்டு அளவில் அவநம்பிக்கையாளர்கள் இருக்கும் இக்குழுவில் எனக்கு இடம் இல்லையென்றாலும், ஒரு நம்பிக்கையாளனாக இங்கு நான் உள்ளேன். என்னுடைய விரலை உயர்த்திக் காட்டுவதில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன்.  அதில் என்னுடைய நகத்தில் நீங்கள் பார்க்கும் மை குறி தேர்தலில் வாக்களித்ததன் அடையாளம். என்னுடைய மாநிலத்தில் (டெல்லி) சமீபத்தில் தேர்தல் நடந்தது. 

கடந்த ஆண்டு எங்களுடைய நாட்டில் தேசிய அளவில் தேர்தல் நடந்தது.  தேசிய அளவில் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்களில் 70 கோடி பேர் வாக்களித்தனர். அனைத்து வாக்குகளையும் ஒரே நாளில் எண்ணுகிறோம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது யாரும் அதனை எதிர்ப்பதில்லை. நாங்கள் சிறப்பாக வாக்களிக்கிறோம், எங்களின் ஜனநாயகத்தின் திசை குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.  எனவே எனது முதல் செய்தி என்னவென்றால், உலக அளவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என நீங்கள் கூறுகிறீர்கள். மன்னித்துவிடுங்கள். நான் இதிலிருந்து மாறுபடுகிறேன்.

ஜனநாயகம் உங்கள் மேஜைக்கு உணவினைக் கொண்டுவராது என்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கூறினார். உண்மையில்  இன்று நாங்கள் ஜனநாயக சமூகமாக இருப்பதால், நாங்கள் 80 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவினையும், உணவினையும் வழங்குகிறோம். அது அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள், அவர்களின் வயிறு எவ்வளவு நிரம்பியுள்ளது.  இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து