முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேக் பிரேசர் மீது நம்பிக்கை இருக்கிறது: ஸ்டீவ் ஸ்மித்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      விளையாட்டு
Stuv-Sumet 2024-01-13

Source: provided

சிட்னி : இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை தான் நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.

ஒயிட்வாஷ்...

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஆஸி. அணியின் தொடக்க வீரராக இளம் வீரர் ஜேக் பிரேசர் -மெக்கர்க் ( ஜே.எப்.எம்) களமிறங்கினார். 

தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...

டி20யில் கலக்கிய இவர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 22 வயதாகும் ஜே.எப்.எம் 2 போட்டிகளில் 11 (2,9) ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி போட்டியில் ஆஸி. 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

திறமை இருக்கிறது...

சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியில் ஜே.எப்.எம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஸ்மித் கூறியதாவது: ஜே.எப்.எம் அதிரடியான வீரர். அவருக்கு திடலில் அனைத்து இடங்களிலும் அடிக்கும் திறமை இருக்கிறது. அவர் சரியான நேரத்தில் பந்தினை அடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனாலும் கடைசி போட்டியில் அவர் சில சிறப்பான ஷாட்டுகளை அடித்தார். ஜேக் பிரேசர்-மெக்கர்க்கிடம் திறமை இருக்கிறது. அதனால்தான் அவரை அணியில் எடுத்துள்ளோம். ஜே.எப்.எம் மிகவும் ஆபத்தான கிரிக்கெட்டர். பாகிஸ்தான் பிட்ச் அவருக்கு மிகவும் உதவும். அணியுடன் இருந்து அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்வார் என நினைக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து