முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளோம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-1-2025-02-19

சென்னை, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல்  நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வடசென்னை வளர்ச்சித் திட்ட நிதி ரூ.6400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, 712 பேருக்கு குடியிருப்பு ஆணைகளை வழங்கி  அவர் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று (பிப்.19) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த காலங்களில் வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி நாம் இன்றைக்கு வடசென்னையை வளர்ச்சி சென்னையாக, எப்படி இன்றைக்கு மத்திய சென்னை, தென்சென்னை வளர்ந்து வந்திருக்கிறதோ, அதேபோல், இந்த வடசென்னைப் பகுதியையும் மாற்றிட வேண்டும், அதைவிட பெரிதாக உருவாக்கிட வேண்டும் என்பதற்காகதான் தி.மு.க. அரசு இன்றைக்கு சிறப்பாக பல்வேறுத் திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

முதலில் வடசென்னை பகுதிக்காக சட்டமன்றத்தில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்று நான் அறிவித்தேன். இப்போது 1000 கோடி அல்ல, 6400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகளையெல்லாம் நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கலாம். இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அறிவித்த திட்டங்கள் பல. தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

புதுமைப் பெண் என்கிற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கின்றபோது மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், இன்றைக்கு இந்த மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல. தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பிவைக்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுக்கு காலை உணவுத் திட்டம் என்ற பெயரிலே காலை உணவினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்வதற்கு காரணம். இதுஎல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் சார்பில்தான் இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு வீடுகளை உருவாக்கித்தந்து அதற்கு தேவையான சலுகைகளை, நீங்கள் எந்த அளவுக்கு சலுகைகளை எதிர்பார்த்தீர்களோ, அதைவிட அதிகமான சலுகைகளை இந்த அரசு உங்களுக்கு வழங்கி இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதை நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு அப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஆட்சியை இன்றைக்கு உங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து