முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை தெரிவித்த 2 பேர் கைது

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      உலகம்
Jail-1

Source: provided

கார்வார் : பாகிஸ்தான் பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை தெரிவித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் கார்வார் நகரில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். கதம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 2 பேர் பாகிஸ்தான் இளம்பெண்ணிடம் இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், 2023-ம் ஆண்டு பேஸ்புக் வழியே அந்த பெண் இந்த நபர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக தன்னை காட்டிக்கொண்டார்.

அவர்களிடம் நட்பை பலப்படுத்திய பின்னர், மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் 8 மாதங்களாக பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக, போர்க்கப்பல்களின் இயக்கம் உள்பட இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் கப்பல் கட்டுமான பணி திட்டங்கள் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். இவர்களும் அந்த பெண்ணிடம் பணத்திற்கு ஆசைப்பட்டு, ரகசிய விவரங்களை கசிய விட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அக்சய் நாயக் மற்றும் வேதன் தண்டேல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து