முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: சாதனை படைக்க கோலிக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. 

5 அரைசதம்... 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் முதலிடம் (17 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 791 ரன்) வகிக்கிறார். 2-வது இடத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவும் (742 ரன்), 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவானும் (10 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 701 ரன்) உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். கெய்லின் சாதனையை முறியடிக்க இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. கோலி இதுவரை 13 ஆட்டத்தில் ஆடி 5 அரைசதம் உள்பட 529 ரன் எடுத்துள்ளார். இன்னும் 263 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.

ரோகித் சர்மா... 

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 481 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்துள்ளார். அனேகமாக ரோகித் சர்மாவின் கடைசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கும் என்பதால் அவரும் முத்திரை பதிக்க முயற்சிப்பார். அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-3 இடங்களில் நியூசிலாந்தின் கைல் மில்ஸ் (28 விக்கெட்), இலங்கையின் மலிங்கா (25 விக்கெட்), முரளிதரன் (24 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து