முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றம்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2023-09-17

Source: provided

கராச்சி : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாம்பியன்ஸ் டிரோபி தொடர் நடைபெறும் கராச்சி மைதானத்தில் தற்போது இந்திய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

துபாயில் போட்டி...

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடக்கிறது. போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.

சமூக வலைதளங்களில்.... 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி மட்டும் இல்லை. மற்ற நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவின் கொடியை ஏற்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த புறக்கணிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவின் கொடி பாகிஸ்தான் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி நேற்று தொடங்க உள்ள நிலையில் கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து