முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபரை கொல்ல சதித்திட்டம்: பிரேசில் முன்னாள் அதிபருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025
Brazil 2025-02-19

Source: provided

பிரேசிலியா : அதிபரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக பிரேசில் முன்னாள் அதிபருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் தொடர்வதற்காக அவர் சில சதித்திட்டங்களை தீட்டியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்படி, தற்போது அதிபராக பதவி வகித்து வரும் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு விஷம் கொடுக்கவும் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியை கொல்லவும் சதித்திட்டம் தீட்டினார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுபற்றி அந்நாட்டின் அரசு தரப்பு வழக்கறிஞரான பவுலோ கோனெட் கூறும்போது, ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக பொல்சனாரோ மற்றும் 33 பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கின்றனர். பொல்சனாரோவின் எதிரியான சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் என்பவரை சுட்டு கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

அப்போது, அதிபர் மாளிகையில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விவரம் பொல்சனாரோவிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார் என 272 பக்க குற்றச்சாட்டு அறிக்கையில் கோனெட் குறிப்பிட்டு உள்ளார். எனினும், பொல்சனாரோ தரப்பு கூறும்போது, சட்டத்தின் ஜனநாயக விதியை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட கூடிய எந்தவொரு இயக்கத்திற்கும் பொல்சனாரோ ஒருபோதும் ஒப்புதல் அளித்தது கிடையாது என தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து