முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை ஆப்கன் தூதரகம் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      உலகம்
Afghan-2025-02-19

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளது. "தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அதன் அருகில் உள்ள நகரமான ராவல்பிண்டியிலும் உள்ள ஆப்கானிய குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களை விட்டு வெளியேறி பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர காவல் துறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு முறையான அறிவிப்பும் இல்லாமல் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்கு எந்தவொரு முறையான தகவலும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் குடியுரிமைச் சான்றிதழுடன் சுமார் 7 லட்சம் பேர், பதிவுச் சான்றிழதழுடன் 13 லட்சம் பேர் பாகிஸ்தானில் வசிக்கின்றனர். இது இல்லாமல், சட்டவிரோதமாக லட்சக்கணக்கான ஆப்கன் நாட்டவர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், தங்கள் நாட்டில் உள்ள ஆப்கனிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றதாக அந்நாட்டின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து