முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      உலகம்
UN-member-2023-09-21

Source: provided

ஜெனீவா : தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்தியா ஏற்கனவே முக்கியமான காலநிலை இலக்குகளை அடைந்து வருகிறது என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐ.நா. காலநிலை மாற்ற அமைப்பின் தலைவர் சைமன் ஸ்டீல் கூறியதாவது;- "இந்தியா ஏற்கனவே முக்கிய காலநிலை இலக்குகளை அடைந்து வருகிறது. மேலும் தூய்மையான எரிசக்தி மற்றும் தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா இன்னும் வேகமாக வளர வாய்ப்புள்ளது. அந்த வளர்ச்சியானது இந்தியாவின் பொருளாதார செழிப்புக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் கூடுதலாக லட்சக்கணக்கான வேலைகள், சிறந்த சுகாதார கட்டமைப்புகள், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மலிவான, பாதுகாப்பான எரிசக்தி ஆகியவற்றோடு, இந்திய மக்களின் வாழ்க்கைத் தரமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இந்தியாவின் தனித்துவமான புவியியல் அமைப்பு மற்றும் மிகப்பெரிய மக்கள்தொகை காரணமாக, ஏராளமான மக்கள் காலநிலை தாக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மக்கள்தொகை மற்றும் புவியியல் பன்முகத்தன்மைதான் இந்தியாவை வலிமையாக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து