முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு சிறை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2025      உலகம்
Japan 2024-02-14

Source: provided

டோக்கியோ : ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீசிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் புமியோ கிஷிடா, கடந்த 2023-ம் ஆண்டு வாகயாமா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்டவில்லை. அருகில் நின்றிருந்த 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ரியுஜி கிருமா என்ற வாலிபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை வாகயாமா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணையின் ஆரம்பத்தில், தான் குற்றம் செய்யவில்லை என்றும், கிஷிடாவை கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ரியுஜி கிருமா (வயது 25) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து